சிமோனா மகாவிஷ்ணு   (சிமோனா மகாவிஷ்ணு)
176 Followers · 16 Following

read more
Joined 27 August 2017


read more
Joined 27 August 2017

கொண்டாடப்படாத வெற்றியென்பது
பிறந்ததுமே கொல்லப்படும்
நூறு குழந்தைகளுக்குச் சமம்!

-



அன்னார்ந்து பார்க்கிறேன்
நட்சத்திரம் இருந்த இடத்திலிருந்து
ஒரு துளி விழுகிறது

-



பிறத்தலுக்கும் மரணித்தலுக்கும்
இடைப்பட்ட தூரத்தின்
இணைப்பு

-



இலையின் மேல் நீர்த்துளி
துளியினுள் சிறு ஒளி
இருள் பின்னால்தான் தெரிகிறது

-



பொய்க்கு
தன்னை ஒருபோதும்
மறைத்துக்கொள்ளத்
தெரிவதில்லை!

-



உனக்கு முக்கியத்துவம்
அளிக்கப்படாத இடத்திலிருந்து
ஒதுங்கியே இரு!
கூட இருந்து
கஷ்டப்படுத்துவதை விட
தள்ளி இருந்து
கஷ்டப்படுவது மேல்!


-



ஒவ்வொரு
தற்கொலையின் போதும்
பல பிணங்கள்
உயிர்ப்பெறுகிறது!

-



கடலை சுமந்துசெல்லும்
இந்த மேகத்திடம்
நதிக்கான துளிகள் இல்லை!

-சிமோ.ம

-



உருகியோடும் வலி
கோடைக்காலத்து எருக்கம் பூவில்
ஒளிந்து கொண்டிருக்கிறது...
வெடித்துச் சிதறும்போது
பறந்து பிடித்து
ஊதிவிடுவோம் வா!

-சிமோ.ம

-



நீ மறைக்கும் புன்னகையில் தான்
என் மரணத்தின் நாட்கள்
விதைக்கப்படுகிறது..!

-


Fetching சிமோனா மகாவிஷ்ணு Quotes