Bala Murugan   (Bibliophile_Poetu🪶)
24 Followers · 1 Following

தோன்றிய எண்ணங்கள் யாவும் கிறுக்கல்களாய்...
Joined 27 June 2020


தோன்றிய எண்ணங்கள் யாவும் கிறுக்கல்களாய்...
Joined 27 June 2020
23 APR 2023 AT 11:24

பூவுடன் சேர்ந்த நாரும்
மணப்பது போல...
அவள் கேசம் சேர்ந்ததால்
பூவும் மணக்கிறது...

-


1 APR 2023 AT 20:25

அவளில்லா அலுவலகம்...
பிறையில்லா இருள்வானம்...
அவள் நகையில்லா அலுவலகம்...
அவனுக்கு வேதனையான நரகம்...
அவள் குரலில்லா அலுவலகம்...
அவனுக்கு விசும்பில்லா பாலைவனம்...
அவள் உருவில்லா அலுவலகம்...
அவனாவான் அங்கு நடைபிணம்...

-


31 MAR 2023 AT 6:09

வாசனைத் திரவியங்களும்
வழக்கொழிந்தன...
மொழிகளும் உவமையின்றி
தலை கவிழ்ந்தன...
இவள் வாசனையை
சமன் செய்யும் முயற்சியில்...

-


30 MAR 2023 AT 6:10

முதன் முறை
பணம் மீது
பொறாமை...
😏😏😏
அவள் தொட்டு
தடவி
எண்ணும் போது...

-


29 MAR 2023 AT 5:34

இவள் விழியசைவால்
உயிர் தரித்து
அஃறிணையும்
உயர்திணை ஆகின்றது...
# கண்ணாடி

-


28 MAR 2023 AT 5:48

பல்லாண்டு கால
தவம் பலித்தது...
தவப்பயனாய்
அவள் தாள்
பற்றிய களிப்பில்
காலணி...

-


27 MAR 2023 AT 9:56

எந்த மொழியிலும்
வசப்படவில்லை வார்த்தைகள்...
இவள் உறவை
வரையறை செய்யவும்...
இவள் அழகியலை
வர்ணனை செய்யவும்...

-


8 SEP 2022 AT 12:08

ஆயிரமாயிரம்
ஆபத்தான பகுதிகளுக்குச்
சமம்...
அவளின்
எனக்கென்ன கோவம்
நீ சொல்லு...

-


4 SEP 2022 AT 11:41

பேருந்தின் தவம்
பலித்து விட்டது...
அவள் கண்ணயர்ந்த
சமயத்தில்...

-


11 AUG 2022 AT 19:54

நீ அல்லாத எதுவும்
உனை அல்லாத எதுவும்
மாறுதலுக்கும்
பகிர்தலுக்கும்
உட்பட்டதே...

-


Fetching Bala Murugan Quotes