Arvin Achilles   (Arvin)
109 Followers · 134 Following

read more
Joined 20 November 2017


read more
Joined 20 November 2017
15 AUG 2022 AT 11:13

"இனியெப்போதும் எக்காலத்திலும்
வந்து நிற்க முடியாத வீட்டின் முற்றத்தில்
கித்தாரின் கம்பிகளைப் போன்ற
ஈரத்துணிக் கொடியை
எங்கிருந்தோ வந்த சிட்டுக்கள்
கிள்ளி அமர்கின்றன
பழக்கமான தாளகதியில் துடிக்கும்
கொடிக் கயிற்றின் மிச்ச ஈரம்
துருவேறிய தகரத்தில்
மழைச்சாரலாகத் தெறிக்கிறது
முச்சந்தியைக் கடப்பதற்குள்
இதயம் கொடிக்கயிறாகிவிட்டது"
~ அர்வின்.

-


26 FEB 2021 AT 21:16

Music is a survival instinct

-


3 FEB 2021 AT 19:44

Oh my love oh my love
Take me to the corner of the universe
From where all the darkness disperse
Come let's sow the seeds of light
That glow only during the night
Oh my love oh my love
Let our souls be the spring of quantum
Which fills the space with crying vaccum
While the waves of thoughts play mime
We shall quit the meaningless space-time

-


13 JAN 2021 AT 19:33

கயிறின்றித் தொங்கும்
கிணற்றுக் கப்பியுருட்டி
நினைவுச்சரடு மெல்ல இறங்குகிறது
உறைகளுக்கிடை இருட்டில்
பாசிப் பச்சை நிறத்தில்
ஆங்காங்கே துளிர்க்கிறது
வஞ்ச முகங்களின்
பித்தச் சிரிப்பு
பிடிப்பற்ற விளிம்பிலிருந்து
வழுக்காமல் எட்டிப்பார்க்கிறேன்
எனக்கு முன்னர்
கிணற்றில் விழுந்த
எந்தன் நிழல்
உயிருடனே மிதக்கிறது

-


29 JUL 2020 AT 22:20

பயன்பாட்டில் உள்ளது போக
மிஞ்சிய பொருட்களின் அறையில்
மிகுதிகளின் பிரதிநிதியாக
பேய்கள் புழங்குகின்றன
அவை அப்பொருட்களின்
ஆன்மாவாக இருக்கக்கூடும்
உபரி நினைவுகள்
உபரிக் கவலைகள்
கோபம் வன்மம் காமம்
அனைத்தும் மிகுந்து
ஓர் அறையில் தங்கி
முகம் சிதைந்து
கண்கள் பிதுங்கிச் சிவந்து
நகங்களும் பற்களும் நீண்டு
பேய்களாகின்றன
அடைத்த அறையின்
தனிமை தாங்காது
நம் கவனத்தைக் கோரவே
காற்றில்லாத சமயங்களிலும்
மெல்லிய திரைச்சீலையை
பின் நின்று அசைக்கும் பேய்கள்
உண்மையில் பரிதாபத்துக்குரியவை

-


21 NOV 2019 AT 18:40

Right after the Apocalypse
Renaissance is Inevitable

ஊழிக்குப் பின்னும்
உலகம் துளிர்க்கும்

-


18 NOV 2019 AT 21:37

நட்சத்திரங்கள்
நடுங்கிச் சிதறிய இரவில்
வான்கா அறுத்தெறிந்த
ஒற்றைக் காதைப் போல
துண்டாகக் கிடக்கிறது
வளர்பிறை நிலவு

-


20 SEP 2019 AT 19:16

எவர் ஒருவருக்கும், என் மீது நேசம் கொண்டதற்காக குற்ற உணர்ச்சி ஏற்பட்டு விடாதபடிக்கு வாழ்ந்திருப்பது ஒன்றே எனது கடன்

-


19 SEP 2019 AT 20:02

இசை அண்டத்தின்
அச்சாணியாக இருக்கிறது
மெளனம் இசையின்
அடிக்குறிப்பாகக் கிடக்கிறது
நான் மெளனத்தின்
ஆன்மாவாக உலவுகிறேன்

-


6 APR 2019 AT 19:24

"பெருமழையில் துடிக்கும்
மரங்களின் இலைகளைப் போலவே
பேரன்பைப் பெறுகையில்
அத்தனை அணுக்களும்
அதிர்கின்றன"

-


Fetching Arvin Achilles Quotes