சில நேரங்களில் சில மனிதர்கள்,
உடைந்த கண்ணாடி துண்டுகளை
ஒட்ட வைத்து அழகு பார்க்க நினைக்கிறார்கள்,
அதில் எப்படி அழகாக தெரியும்!
என்றதும்,
மீண்டும் உடைத்து
விடுகிறார்கள்!!?-
1st cry on Jun 1st
Writing mom gift 💌✍️
Big bang theory pola en love ... read more
நான் ரசித்த மலரை
அவன் பறித்து செல்கிறான்,
மன்றாட மனமில்லாமல்
அவன் மடி சாய்கிறது மலர்!
ரசித்து கொள்வானோ
கசக்கி எறிவானோ!!
மலரே என் ரசனையில் சலிப்பானதோ இல்லை உனக்கு சகிப்பு தன்மை கூடியதோ!!-
என்னையும் என் இதயத்தையும் நொறுக்கும் வல்லமை அவள் ஒருவளிடம் மட்டுமே!!
-
மாற்றான் தோட்டத்து மல்லிகை மனக்காது மன்றாடும்!! ஆம்! நான் மாற்றான் தோட்டத்து மல்லிகை தான், உன்னில் மனக்கவே மன்றாடுகிறேன். என்னை மணக்க வேண்டாம் உன் கூந்தலில் மடிந்து கொள்கிறேன்!!
-
அவள் யாருக்காகவோ என்னை விலக்கிவைப்பது! ஒரு பெண்ணை மாதவிடாயின் போது தன் வீட்டிலே விலக்கி வைத்தாள் அதனால் அவள் அடையும் வலியை விட கொடுமையானது!!
-
போல் வந்து சென்று விட்டாள் என்னிடம்!
இதனால் ஏற்பட்ட சேதாரத்தை
பார்வையிட ஏனோ தயங்குகிறாள்!!-
வேண்டி நிற்கிறேன் உன்னிடம்,
உன் உறவை தாண்டி ஏதுமில்லை
என்பதால்! நீ போதுமென்றாலும் போக வழி இல்லை! இப்படியாகவே போக மன்றாடி நிற்கிறேன்!!-
எத்தனை கண்ணீர் கந்தலும்,
சந்தோஷ கடலும்,
இதை கடத்தி செல்ல
ஒற்றையில் சுற்றி திரிகிரேன்!!-