appu aravinth   (Buoyant Breeze)
38 Followers · 23 Following

மக்களுக்கான மருத்துவன்❤
தஞ்சை மருத்துவ கல்லூரி🖤
Joined 27 December 2017


மக்களுக்கான மருத்துவன்❤
தஞ்சை மருத்துவ கல்லூரி🖤
Joined 27 December 2017
5 APR 2021 AT 21:05

ஒன்றாக நாம்குழுமி சிறித்த கல்லூரி நாட்களுக்கு
சிறகடித்த சிந்தனையில்
சிதைந்துவிட்ட நட்பதுவும் சொன்னது.,

ஆம், சிலநேரங்களில் சிலமனிதர்களும்
சந்தர்ப்பவாதிகளே..!

நிரந்தரம் என்றும் நிரந்தரமற்றதே..!

-


13 MAR 2021 AT 20:17

உன்நினைவால் சிறையுற்று ,
நீ நின்ற இடமெல்லாம்
நிமடங்கள் நின்று பார்த்தேன்..
நீயுமில்லை என்ற அந்த எதார்த்தை,
உன் நினைவுகளால் முத்தமிட்டு திரும்பினேன்...
அதன் ஈரம்தேய்ந்த காற்றேனும் உன்னை வந்து ஒருமுறை தீண்டிவிட்டு திரும்பட்டும்..!

-


13 MAR 2021 AT 19:53

மின்னலாய் எனைதாக்கி,
வின்னைதாண்டி வரத்துடிக்கும்
பச்சைக்கிளியும் முத்துச்சரமுமாய்
வேட்டையாடி விளையாடி,
புத்தம்புது காலையாய்
வாரணம் ஆயிரம் காட்டி
என்னை நோக்கி பாயும் தோட்டாவும்
என்னை அறிந்துவிட்டால்
அச்சம் என்பதும் மடமையாகும்
எனினும் அந்த பாவ கதைகளில்
குட்டி ஸ்டோரி சொல்லும்
துருவ நட்சத்திரமே,
நீ தானே என் பொன்வசந்தம்...!

-


31 JAN 2021 AT 0:48

கடலோரம் கைக்கோர்க்கும்
காற்றோடும் கதையிசைத்து,
மொழிபேசும் கண்இமைகள்
காதோரம் அதைசேர்த்து,
காலோரம் கட்டிக்கொள்ளும்
கடல்மணலின் இரமது,
இதழ்பதித்த இடமதனின்
ஈரத்தில் தோற்காதோ..!

-


31 JAN 2021 AT 0:17

நீரற்ற தீவதனில் நிலப்பரப்பின் ஒருமுனையில்,
பிரிவுற்ற மொழியதனில் சிறகசைக்கும் நீர்ப்பறவை..
நீருற்ற விழிமுனையும் நினைவுகளால் முத்தமிடும்,
நீயற்ற இரவுகளில் நீங்காத உன்முகத்தை..!

-


21 JAN 2021 AT 19:15

அவளை காணும் ஒவ்வொரு நொடியிலும்,
அவளுள் சிக்கிக்கொள்ளவே தோன்றுகிறது...
இமையிடை துடிப்பில்..
கைவிரல் மடிப்பில்..
காது மடலிடுக்கில்..

-


21 JAN 2021 AT 19:13

இமைஅசைத்து தலைகோதி அவள்சிரிக்க,
இதழ்ரேகை விடும் இடைவெளியில்,
சிக்கித்தவிக்கும் சொற்களுமே வழிதேடி வெட்கத்தால் விழிமூடும்..

- தோல்சாயந்த மாலைபொழுதில் அவளிடம் தோற்ற தருணமது..!

-


21 JAN 2021 AT 19:04

எண்ணங்கள் வான்மோதி விழும் மழைத்துளிக்குள் உனைதேடும் ஏக்கங்கள்
அலைமோதும்,
இந்த எழும்பு முறிவுகளுக்கு மத்தியிலும்.,
என்னவளின் வருகைக்காக..!
ஏழாம் நாளதுவும் ஏனோ நெடுந்தூரம்...!

-


15 NOV 2020 AT 21:52

In the middle of an autumn supper i saw u so young, me as old as time...
In the middle of night under the candle light,
those short stories missed us in wooden frame...
I never knew that aging is a process...
When i struck by lightning,
When i stuffed up in ice breeze,
When i went to the war with captain martin,
When i played that piano with the granny,
When i messed up my father’s buttons,
When i met u at the New york night,
When i saw u broke your leg into pieces,
When i realised mama left me to heaven,
When i saw u give birth to caroline,
When i left u at our duplex mastersuite,
When i never stopped loving u,
And when we say nothing lasts forever
All those days when i grew younger in your arms, inside your warmth, i always wanted to say
“Good night daisy”

-


15 NOV 2020 AT 21:44

அன்றாட இரவின் அழகான தருணம் அது...
அவள் பேசிமுடித்த அலைபேசி அணைத்து,
நினைவுகளால் அவளை அணைத்துக் கொள்ளும் நிமிடங்கள்..!

-


Fetching appu aravinth Quotes