Apoorva Aravindkumar   (Saki)
105 Followers · 50 Following

அன்பென்று கொட்டு முரசே!
Joined 17 August 2017


அன்பென்று கொட்டு முரசே!
Joined 17 August 2017
22 MAR 2020 AT 21:47

எத்தனை முறை மடிந்திருப்பாயோ
அன்பே!
எத்தனை முறை மடிந்திருப்பாயோ
இன்றே உணர்ந்தேன்,
நினைவு நாள் என்று இந்த நானிலமும் எண்ணுவது
ஒருவரின் இறந்த நாளையே என்று.
எத்தனை முறை மடிந்திருப்பாயோ
அன்பே நீயும்...
எத்தனை முறை தான் மடிந்திருப்பாயோ?

-


19 JUN 2019 AT 17:45

குடும்பத் தகராறினால்,
பிறந்த இடம்‌ சென்று புகுந்த வீடு திரும்ப மறுக்கும் தமிழ்நாட்டின் வாழாவெட்டி; மழை

-


11 FEB 2019 AT 10:45

காட்சிப்பிழை;
அவன் காமத்திலும் நான் வடிகட்டும் உண்மைக் காதல்.

காதல் பிழை;
என் காதலிலும் அவன் வடிகட்டும் தெளிந்த காமம்.

இரண்டு திருத்தவியலாப் பிழைகளின் குவியம்;
முதுகெலும்பில்லா உணர்வுகளின்‌ வெள்ளம்.
கரைபுரண்டு ஓடுகிறேன் அவனோடு
என் கிறுக்கல்களும் கவிதைகளாய் மாறும்‌ என்று.

- ஒரு கவிஞரின் பேனா

-


30 DEC 2018 AT 22:47

மாயாஜாலம் காட்டும் உலகினின்று விடுபட,
எதார்த்தம் கொடுக்கும் சவுக்கடி.

-


15 OCT 2018 AT 0:05

அவனே வசந்தம் எனக் கொண்டிருக்கும்
பிடிவாதக்காரி; நான்.

இலையுதிர் காலம் ; அவன்.

-


14 OCT 2018 AT 22:51

கருணைக் கொலை மனுவோடு காத்திருக்கும்.

-


10 AUG 2018 AT 23:18

கைக்கோர்த்து விடுவேனோ என்று‌,
நீ காலுறைப்பையில் அவைகளை ஒளித்து வைப்பதை நான் கவனித்து விட்டேன்!

சஞ்சலம் வேண்டாம் கண்ணா !!
உன் கரம் பிடிக்க இனி ஆசை இல்லை...
விதியினும் வலிய இந்தக் காதலின்
கசங்கிய காகிதங்களைக் கொண்டு
கவிதைகள் எழுதவே ஆசை !

-


31 JUL 2018 AT 21:13

முழுவலே,
உனது முழுநீள முறுவலிடம்
மண்டியிடுகிறேன்
எ‌னது நெஞ்சில் எழும்பவிட்ட
ஆழிப்பேரலைகளை நிறுத்தக் கேட்டு !

ஏனெனில்,
காரணி இங்கு பூகம்பம் இல்லை,
வட்டமிடும் பட்டாம்பூச்சிகள் 🦋
மீண்டும் ஒருமுறை,

மீண்டும், மறுமுறை !!

-


12 JUL 2018 AT 1:13

அகிலஞ்சூழ் ஆழியினை அந்திவரைப் பருகி
முகிலவைதாம் மூச்சிறைத் தழுவதெலாம் - நித்திலமாய்
பெதும்பையள் அணலேற ஞாயிறவன் தந்திரமாய் 
நிகழ்த்தும் பாசாங்கே காண்

-


23 JUN 2018 AT 12:35

நீ இறக்கிய ஒவ்வொரு ஆழமான ஊசிக்கும், நான் முத்தங்களால் பதில் அளித்து இருந்தால்....

ஆறா வடுக்கள் தோன்றி இருக்கும்
தாடியில்லா உன் கன்னங்களில்...
காதலின் சின்னமாக அல்ல
வலியின் சின்னமாக !

-


Fetching Apoorva Aravindkumar Quotes