590
Quotes
526
Followers
318
Following

கவிதா சுதாகர் (கவிதாசுதாகர்)


பித்தனாகி
சித்தனாகி
புத்தனாகி
விடுவேனோ...
இல்லையில்லை ...
எத்தனாகி...
அரசியல்வாதியாகி
ஏழு தலைமுறைக்கு
சொத்து சேர்த்து விடுவேன்😊

-


Show more
29 likes · 12 comments

அம்மாடி மீனாட்சி....
திருநீறு வச்சுவிடும் பாட்டி
டேய் கண்ணம்மா
உச்சி முகரும் அப்பா
அம்மு குட்டி
நான் இருக்கேன்டா அம்மா
ம்ம்ம் அக்கா
தேவதை என கொஞ்சும் தங்கை
பாப்பு மீனு
காப்பு கயறு தந்த பக்கத்து வீட்டு அக்கா
அம்மாடி மீனு
உலை தண்ணீர் வெண்ணையோடு சுந்தரியத்தை
கண்களால் வருடி
என் கரம் இறுக பற்றினான் என்னவன்
அன்பின் மொழியைக் கேட்டேன்
அன்பின் மொழியை பெற்றெடுப்பதற்கு முன்

-


Show more
22 likes · 6 comments

இடியாப்பச் சிக்கலாய் இருக்கும் என் வாழ்க்கையை அழகா உதிர்த்து விட்டு உப்பு புளிப்பு காரம்ன்னு எலுமிச்சை சேவை செய்து ஆறமர உட்கார்ந்து ரசித்து ருசித்து புசித்திடனும் எனக்கும் ஆசை தான்...😊

-


Show more
23 likes · 8 comments · 2 shares

மே18
மண் தாகம் தணித்துக் கொள்ள
எம் இனத்தின் உதிரம் கிடைத்தது
மண் பசிதீர்த்துத் கொள்ள
எம் இனத்தின் உயிர் புசித்தானோ..

எழும்புக் கூடுகள் எழுந்து வந்தால்
ஓராயிரம் கதைகள் சொல்லக் கூடும்
வீழ்தோர் எல்லாம் வித்தாகி துளிர்ப்பர்
விழித்தெழும் நாளுக்காக காத்திருப்போம்

-


Show more
19 likes · 6 comments

I took off my mask and i will be...

-


Show more
31 likes

வனதேவதை தனது
வரவு பதிவேட்டில்
குறிப்பெடுக்கிறாள்
வலசைக்கு சென்ற
பறவைகள் மான்கள்
காட்டுப்பன்றிகள்
போக வருகைக்கான
பதிவேட்டில் யானைகள்
காணாது தவிக்கிறாள்
காடுகளின் ஆக்ரமிப்பா
தந்ததிற்காக படுகொலையா
பரிதவித்து அழுகிறாள்....
இங்கு சின்னதம்பி காட்டுக்குள்
விரட்டிக் கொண்டிருக்கிறான்..

-


Show more
21 likes · 3 comments

காயா
வல்லபி - தேன்மொழி தாஸ்

இரண்டும் கவிதை தொகுப்பு
கவிஞர் தேன்மொழி தாஸ் பன்முகம் கொண்டவர். அவர் கவிதைகள் நம்மை சித்தம் அடையச் செய்துவிடும்.. கண்களில் நீர் கசிய மெய்யுணர்வில் திளைத்திடுவோம்

-


Show more
21 likes · 12 comments

மாதொருபாகன்- பெருமாள் முருகன்
பூவரசம் மரமாக கிளை விரிகிறது...காளி பொன்னா கதையின் மாந்தர்கள். இவர்கள் இல்லறவாழ்வின் அன்னியோன்னியத்தை மிக அழகாக வடித்திருப்பார். குடியானவனின் வாழ்க்கையில் பிள்ளை பேறுக்காக அவர்கள் எடுக்கும் முயற்சி தான் கதையின் மையக்கரு.. ..பொன்னாவின் கடைசி முயற்சி எல்லோரையும் கலங்க வைத்திடும்.

-


Show more
21 likes

திருக்குறள்

எத்தனை நூல்கள் இருந்தாலும்
திருக்குறளுக்கு ஈடாகுமா..
அறம் பொருள் இன்பமொடு
வாழ்வுதனை வள்ளுவம் சொல்லுமே
மதம் இனம் மொழி கடந்த நூல்
இதன் வழி நடக்க வாழ்வில்
நெருங்கிடுமா துன்பமும் துயரமும்
பொக்கிசமாய் நாம் போற்றிடுவோம்
நன்நெறி போற்றும் இந்நூலை
என்றும் நாமும் படித்திடுவோம்

-


Show more
23 likes · 5 comments

நிசப்தமா...
பேரலையின் ஓசை
இசையின் கானம்
திருவிழாக்கள்
கொண்டாட்டங்கள்
வானவேடிக்கைகள்
அறப்போராட்டங்கள்
வன்முறையில்லா தேசம்
அமைதி நிலவுகிறது!!

கருவறையிலும்...
கல்லறையிலும் ....
அமைதி தூங்குகிறது!!

-


Show more
20 likes · 6 comments · 1 share

Fetching கவிதா சுதாகர் Quotes

YQ_Launcher Write your own quotes on YourQuote app
Open App